ETV Bharat / state

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு புதிதாக 27 அறிவிப்புகள்! - சென்னை மாவட்ட செய்தி

சென்னை மாநகராட்சி மேயர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக 27 அறிவிப்புகள் மாநகராட்சி பள்ளிகள் மேம்பாட்டிற்கு அறிவிப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 10:27 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மாமன்றக் கூட்டத்தில் இன்று(மார்ச் 27) தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 1000ஆனது ரூ.10,000ஆக அதிகரிப்பு உள்ளிட்ட 27 அறிவிப்புகள் மாநகராட்சி பள்ளிகள் மேம்பாட்டிற்கு அறிவிப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளுக்கான முக்கிய புதிய அறிவிப்புகள்:

  • சென்னைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கும் வசதியாக சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் Public Address System அமைத்து தரப்படும்.
  • முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டு 2023-24இல் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 Public Address System அமைத்து தரப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Counsellors) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 இலட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.
  • மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 139 பள்ளிகளுக்கு 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி (Manual), மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி (Electronic), ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் Maracas போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும்.
  • மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் (ஏப்ரல் மாதம்) வரை மாலையில் சிறுதீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு, இதுவரை ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2023-24ஆம் கல்வியாண்டில் ஊக்கத்தொகை ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • சென்னைப் பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று Joint Entrance Exam (JEE), Common Law Admission Test (CLAT) National Eligibility cum Entrance Test (NEET) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் (எ.கா. IIT, National Law School of India University Bangalore, AllMS and MMC) சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் (Tuition Fee) மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியால் 2023-2024ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்படும்.
  • சென்னைப் பள்ளிகளில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேளையின்போது 10 நிமிடங்கள் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும்.
  • சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் மேல்நிலைப் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிகளில் ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.
  • 2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் பள்ளி கல்விக்குப் பின் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிகழ்வாக தொழிற்சாலைகளை பார்வையிடுவதற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்
  • சென்னைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் பள்ளிப் படிப்பிற்குப்பின் அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பற்றி அறிந்து முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு வழிகாட்டும் விதமாக அது தொடர்பான துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களின் வாயிலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance Programme) நடத்தப்படும்.

இதையும் படிங்க: தமிழ்த்தேர்வில் தகுதி பெறாத ஐந்து லட்சத்து 30 ஆயிரம் பேர்; தேர்வு முடிவிற்காக காத்துக்கிடக்கும் தேர்வர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.