ETV Bharat / state

சென்னை: 540 மருத்துவ முகாம்களில் 27 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை! - கரோனா மருத்துவ முகாம்

சென்னை: மாநகராட்சி முழுவதும் ஆகஸ்ட் 4ஆம் தேதி 540 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Corona medical camp
கரோனா மருத்துவ முகாம்
author img

By

Published : Aug 5, 2020, 12:03 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் வட சென்னை பகுதிகளில் குறைந்தது தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களிலும் நாள்தோறும் கரோனா பரிசோதனை மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது இதையடுத்து 540 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 69 மருத்துவ முகாம்களும், அண்ணா நகரில் 63 மருத்துவ முகாம்களும், தேனாம்பேட்டையில் 62 மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளன.

மருத்துவ முகாம்களில் மொத்தம் 27 ஆயிரத்து 292 நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 740 நபர்களுக்கு வைரஸ் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற தடுப்பு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மே 8ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 27 ஆயிரத்து 679 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில்,15 லட்சத்து 92 ஆயிரத்து 956 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை முழுவதும் 544 மருத்துவ முகாம்கள் நாளை நடைபெறும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இரண்டாம் நாளாக 100ஐ கடந்த கரோனா உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.