கரோனா நோய் தொற்று பரவல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்ததால் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், அவர்களை இந்திய அரசு மீட்பு விமானங்கள் மீட்டுவருகிறது.
இந்த சூழலில், அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 50 இந்தியா்கள், அபுதாபியிலிருந்து 23 இந்தியா்கள், குவைத்திலிருந்து 196 இந்தியா்கள் மொத்தம் 269 போ் மீட்கப்பட்டனர். அவர்களை மூன்று சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் நேற்று (ஆகஸ்ட் 30) இரவிலிருந்து இன்று (ஆகஸ்ட் 31) அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனா்.
சென்னை விமானநிலையத்தில் அவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 173 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 90 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் தனிமைப்படுத்த ஆறு பேரும் அனுப்பப்பட்டனா்.
சிக்காகோ நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட 123 இந்தியா்களில் 50 போ் மட்டுமே சென்னை வந்தனா். மற்றவா்கள் டெல்லியில் இறங்கிவிட்டனா். அதேபோல் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 177 பேரில் 23 போ் மட்டுமே சென்னை வந்தனா். மற்றவா்கள் விஜயவாடாவில் இறங்கிவிட்டனா்.
இதையும் படிங்க: ஜேஇஇ, நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து - ம.பி., முதலமைச்சர்