நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கான 12 விமான சேவைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ATR என்ற சிறிய ரக விமானங்கள் பாதுகாப்பு நலன் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு காலை 07.55 மணி, பிற்பகல் 02.45 மணி, இரவு 07.05 மணிக்கு செல்லும் 3 விமானங்களும், மங்களூருக்கு பகல் 01.45 மணிக்கு செல்லும் விமானம், விஜயவாடாவுக்கு மாலை 04.30 மணிக்கு செல்லும் விமானம், கண்ணூருக்கு இரவு 07.10 மணிக்கு செல்லும் விமானம், கோழிக்கோட்டிற்கு பகல் 10.30 மணிக்கு செல்லும் விமானம் என மொத்தம் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அந்த 7 விமானங்களும் சென்னைக்கு திரும்பி வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.