ETV Bharat / state

அமர்நாத் மேக வெடிப்பு: நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பிய 25 பேர் சென்னை வருகை

author img

By

Published : Jul 10, 2022, 1:47 PM IST

அமா்நாத் யாத்திரை நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பத்திரமாக சென்னை திரும்பினர்.

நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பியவர்கள் சென்னை வருகை

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பித்து, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் நேற்று நள்ளிரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்.

அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது , “நாங்கள் ஒன்பது பெண்கள் உள்பட 25 பேர் ஜூலை 3ஆம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டோம். 4 ஆம் தேதி அமர்நாத் சென்றோம். அப்போது அங்கு நல்ல சீதோசன நிலை நிலவியது. பின்பு அமர்நாத்துக்கு 6 கி.மீ., முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதிக்கு சென்றோம்.

பின்னர் 4 ஆம் தேதி இரவு பஞ்சதரணியில் முகாமில் தங்கியிருந்தோம். அதன் பின்பு 5 ஆம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். தரிசனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கும்போதே மழை பெய்ய தொடங்கிவிட்டது. உடனடியாக அமர்நாத்தில் இருந்து கீழே இறங்குவதையும் அமர்நாத்துக்கு மேலே ஏறுவதையும் தடை செய்து விட்டனர்.

நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு தவித்துக் கொண்டிருந்தோம். அங்குள்ள மக்களிடம் மழை எப்போது ஓயும்? எங்களை எப்போது கீழே இறங்க விடுவார்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஒன்றிலிருந்து, 4 நாள்கள் கூட ஆகலாம். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர்.

ஆனால், 4 மணி நேரத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியது. இதையடுத்து எங்களை கீழே இறங்க அனுமதித்தனர். நாங்களும் அவசரமாக கீழே இறங்கி பஞ்சதருனி வந்தோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டோம். நாங்கள் இறையருளால் தப்பித்து வந்து விட்டோம்.

ஆனால் மீண்டும் 6, 7 ஆகிய தேதிகளில் பெய்த பலத்த மழையால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுவதுமே கனமழையில், மண் சரிவு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டது என்பதை அறிந்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களை இறைவன் தான் காப்பாற்றி இருக்கிறார்.

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. 10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் நின்று ஒழுங்குபடுத்தி, வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர். எந்த உதவி என்றாலும் செய்தனர். அதனால் எந்த வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை. ராணுவத்தினர் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே அவர்களுக்கு, ராணுவத்திற்கு, நாங்கள் ஒரு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: அமர்நாத் மேக வெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு... 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 40 பேர் மாயம்....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.