ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளித்த 25 கோரிக்கைகள்! - Chief Minister MK Stalin to the Prime Minister

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பின்பு முதன்முறையாக மு.க.ஸ்டாலின், இன்று காலை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 25 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அவர் பிரதமரிடம் அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளித்த 25 கோரிக்கைகள்

author img

By

Published : Jun 17, 2021, 11:10 PM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு முதன்முறையாக இன்று (ஜூன்.17) காலை டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில்,

”நீர்வளத்துறை

மேகதாது அனுமதியினை ரத்து செய்ய வேண்டும்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.

கோதாவரி-காவேரி நதிநீர் இணைப்பு, காவேரி- குண்டாறு இணைப்புத்திட்டம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவேரி நதிநீரை தமிழ்நாட்டிற்காக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

மீன்வளத்துறை

மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும்.

தேசிய அளவில் மீனவர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும்.

மின்சாரம்

நிலக்கரி விநியோகத்தில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும்.

மின்சார திருத்த சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும்.

நிதி

மாநிலங்களுக்கான உரிய நிதி பங்கீட்டை அளிக்க வேண்டும். (15ஆவது நிதிக்குழு அறிக்கையின் படி)

14ஆவது நிதிக்குழு பரிந்துரையின் படி உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

நிலுவையில் 1996-1997 முதல் உள்ள 2014-15 வரையிலான ஒன்றிய அரசின் வரியில் மாநிலத்தின் பங்கை அளிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மருத்துவம்

நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கொண்டு வர வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி ஒதுக்க வேண்டும்

கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை ஒதுக்க வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.

விவசாயம்

விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

பஜால் பீமா யோஜனா நிதி ஒதுக்க வேண்டும்.

உணவு

தமிழ்நாட்டிற்கு தேவையான அரிசியை ஒதுக்க வேண்டும்.

தொழில்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் திறக்க அனுமதிக்க வேண்டும்.

மெகா ஜவுளி பூங்கா கொண்டு வர வேண்டும்.

சேலம் இரும்பு ஆலை இடத்தை ராணுவப் பூங்கா அமைக்க ஒதுக்க வேண்டும்.

பள்ளிகல்வி

புதிய கல்விக் கொள்கை திரும்ப பெற வேண்டும்.

கட்டாயக் கல்வி பெறும் சட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும்

சிறுகுறு தொழில்

சிறு குறு நிறுவனங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்க நிதியினை ஒதுக்க வேண்டும்.

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்

இலங்கை தமிழர் விவகாரம்

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமை நிலைநாட்ட வேண்டும்.

தமிழ்

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக்க வேண்டும்.

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலன்

மாநிலங்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் உரிமையை அளிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை

மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு உயர்மட்டப் பாதை அமைக்க வேண்டும்.

துறைமுகம்- திருவொற்றியூம் பறக்கும் சாலை அமைக்க வேண்டும்.

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம்.

6/8 சென்னை - கன்னியாகுமரி முதல் அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும்.

நீதி

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கம்

சென்னை விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும்.

சேலம், தூத்துக்குடி விமான நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்.

33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மாநிலத்திலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்.

நகர வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு அமர்வை சென்னையில் கொண்டு வர வேண்டும்.

சுற்றுச்சூழல்

ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் கைவிட வேண்டும்.

சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020ஐ திரும்ப பெற வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியராவதில் சிக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.