ETV Bharat / state

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் - அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கல்லூரிகளிலும் திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

24hr-vaccine-center-will-open-all-district-medical-college
24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம்
author img

By

Published : Aug 21, 2021, 9:10 PM IST

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் 2 கோடி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு வழங்கினார்.

இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அரியலூரில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை காலை சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம்

குறிப்பாக, தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னையில் இருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகள், அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் தொடங்கப்படவுள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் 15 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - தியேட்டர்களுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.