சென்னை காமராஜர் சாலையில், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள், அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் சட்டம், ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக 80 வழக்குகளும், மது அருந்திவிட்டு ஓட்டியதாக 22 வழக்குகளும், இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்ததாக 10 வழக்குகளும், தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காக 103 வழக்குகள் என மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.