தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 15 நாள்களாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 2504 பேருக்கு கரோனா உறுதி செயப்பட்டிருந்த நிலையில், இன்று 2334 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரோனாவால் இன்று 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் கரோனாவால் 11 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 ஆயிரத்து 589 பேருக்கு நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து 295 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
தற்போது மருத்துமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 894 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 2386 நபர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 584ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேலும் ஒரு ஆய்வகத்தில் கரோனாவை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
- மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,04,862
- கோயம்புத்தூர் - 45,094
- செங்கல்பட்டு - 44,849
- திருவள்ளூர் - 38893
- சேலம் - 28178
- காஞ்சிபுரம் - 26,216
- கடலூர் - 23,537
- மதுரை - 19051
- வேலூர் - 18351
- திருவண்ணாமலை - 17962
- தேனி - 16346
- தஞ்சாவூர் - 15729
- விருதுநகர் - 15569
- தூத்துக்குடி - 15327
- கன்னியாகுமரி - 15,221
- ராணிப்பேட்டை - 15131
- திருநெல்வேலி - 14426
- விழுப்புரம் - 14075
- திருப்பூர் - 13680
- திருச்சிராப்பள்ளி - 12817
- ஈரோடு - 11082
- புதுக்கோட்டை - 10796
- கள்ளக்குறிச்சி - 10416
- திண்டுக்கல் - 9933
- திருவாரூர் - 9958
- நாமக்கல் - 9529
- தென்காசி - 7891
- நாகப்பட்டினம் - 6995
- திருப்பத்தூர் - 6874
- நீலகிரி - 6939
- கிருஷ்ணகிரி - 6840
- ராமநாதபுரம் - 6084
- சிவகங்கை - 6036
- தருமபுரி - 5769
- அரியலூர் - 4451
- கரூர் - 4381
- பெரம்பலூர் - 2199
இதையும் படிங்க: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் வசதி