வளைகுடா நாடுகளுக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து முகவர்கள் மூலம் வேலைக்குச் செல்வதைப் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவர்களில் பலர் முறையான ஆவணங்களின்றி அந்நாட்டில் சிக்கி தண்டனை பெற்றுவருவதும் தொடர்கதையாகிவருகிறது.
அந்தவகையில், ஐக்கிய எமிரேட்ஸில் தண்டனை காலம் முடிந்து கரோனா தொற்றினால் சொந்த ஊர் திரும்ப தவித்துவந்த இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து, அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஐக்கிய எமிரேட்ஸ் அரசு இந்தியர்களைத் திருப்பியனுப்ப சம்மதம் தெரிவித்ததையடுத்து துபாயிலிருந்து சிறப்பு விமானம் ஒன்று நேற்று முன்தினம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் ஐந்து பெண்கள் உள்பட 178 பேர் சென்னை வந்தடைந்தனர்.
குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடிந்த பிறகு விமான நிலையத்திலேயே தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் இவர்களிடம் கரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
மருத்துவப் பரிசோதனையில், துபாயிலிருந்து திரும்பியவர்களில் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விமானப்படை மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வைரஸ் ஒரு உயிரி ஆயுதமாக மாறினால்...