ETV Bharat / state

புதிதாக 2,280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி - corona today

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 2,280 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதிதாக 2,280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

author img

By

Published : Jul 12, 2022, 10:43 PM IST

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 26 ஆயிரத்து 192 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர் டி பி சி ஆர் பரிசோதனையின் மூலம் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 2280 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 63 லட்சத்து 36 ஆயிரத்து 938 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் 35 லட்சத்து 6 ஆயிரத்து 257 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்ததுள்ளது. தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 2,372 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 49 ஆயிரத்து 519 என உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 755 நபர்களும், செங்கல்பட்டில் 352 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,கோயம்புத்தூரில் 116 நபர்கள் , திருவள்ளூரில் 133 நபர்கள் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.