ETV Bharat / state

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2,100 மீனவர்கள் மீட்பு - 2100 fishermen rescued Captured by the Sri Lanka Navy

சென்னை: இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 இந்திய மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

court
court
author img

By

Published : Feb 18, 2020, 8:23 AM IST

மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழ்நாடு அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமாக வழங்கப்படும், 184 கோடியே 93 லட்சம் ரூபாயுடன், 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடித்தல் உதவி எனும் பெயரில் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கை அரசால் படகுகள் சிறைபிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசை அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டு மே முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரு நாட்டு அலுவலர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடைசியாக 2017 அக்டோபர் மாதம் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகள் மூலம் மீன்பிடிக்கும் நடைமுறையை ஆழ்கடல் மீன்பிடிக்கும் கப்பல்களாக மாற்றும் திட்டத்தின் சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேளாண் துறையை கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறிய மத்திய அரசு, 2018 -2019 ஆம் நிதியாண்டு முதல் அனைத்து கடலோர மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், படகுகளை ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களாக மாற்றுவதற்கு ஒரு கப்பலுக்கு 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இஸ்லாமியருக்கான காவலர் பணி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.