ETV Bharat / state

தீபாவளி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு! - வெடித்ததாக 2095 வழக்குகள் பதிவு

TN Police: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு விதிமுறை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 2,095 வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 9:41 PM IST

சென்னை: காற்று மாசடைவதைத் தவிர்க்கும் வகையில், தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரசு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பாதுகாப்பான பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் இந்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக வந்த கார் மோதி 6 பேர் படுகாயம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

இதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தல், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.

இதையும் படிஙக: தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.