சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப். 21) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
1. மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள் நிறுவனங்களின் கட்டடங்களின் ரூபாய் 2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
2. தென்மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பிகாம் பிசிஏ பாடங்கள் ரூபாய் 18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும்.
3. சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எளிதில் சேவையைப் பெறுவதற்கு சென்னை மாவட்டத்தில் ரூபாய் 1.51 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுய தொழில் கடன் உதவி திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் 25 ஆயிரம் தொகையினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீடித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் வழியில் ரூபாய் 5.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
5. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித் தொகை ஒழுக்கமாகவும் மீதமுள்ள தொகையை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையை மாற்றி முழு தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும்.
6. மாற்றுத்திறனாளிகளின் சுய தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது இதற்கு தற்போது உள்ள வயது உச்ச வரம்பை 45 லிருந்து 60 ஆக நீடித்து ரூபாய் 1.48 கோடி செலவில் வழங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 2,100 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.
7. மாநிலம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்கங்களில் ரூபாய் 37.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தணிக்கை மேற்கொண்டு தடையற்ற சூழல் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்.
8. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக முதற்கட்டமாக திருப்பூர் கோயம்புத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூபாய் 1.00 கோடி செலவில் 75 நபர்கள் பயன் பெறும் வகையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9. அ, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள் சிறப்பு பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் உணவு மானியம் ரூபாய் 900 லிருந்து 1500 ஆக உயர்த்தி ரூபாய் 3.92 கோடி கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
9. 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் 1,053 மாணவர்களுக்கு தன்சுத்தம் உடல்நலம் பராமரிப்பதற்காக வழங்கும் சோப்பு தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூபாய் 30 லிருந்து 50 ஆக உயர்த்தி ரூபாய் 2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
10. பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தடை கலெக்டர் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசு நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 1.60 லட்சம் செலவில் 2 மாநில விருதுகள் வழங்கப்படும்.
11. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவித்திறன் குறைபாடுடையயோருக்கான நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் விருதுநகர் ஈரோடு மாவட்டங்களில் உள்ள இரண்டு செவித்திறன் குறைபாடுடையயோருக்கான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் ரூபாய் 1.15 கோடி செலவில் 128 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்தப்படும்.
12. அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகை தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை வருவாய்த்துறை ஆகிய துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
13. மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
14. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தும் போதும் முக்கிய நிகழ்வுகளின் பொழுதும் செவித்திறன் பாதிக்கப்பட்ட பயன்பெறும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படும்.
15. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இல் வலியுறுத்தப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உதவி இடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
16. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
17. கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும் நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
18. தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பினை கண்டறிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு களை உள்ளடக்கிய உயர்மட்ட குழு அமைத்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
19. அறிவுசார் குறைபாடுடையோர் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் திருநெல்வேலி சேலம் திருச்சிராப்பள்ளி காஞ்சிபுரம் செங்கல்பட்டு நாமக்கல் தஞ்சாவூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூபாய் 91.72 லட்சம் செலவில் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
20. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50 லிருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்