தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது.
சென்னையில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரையில் சென்னையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 12 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் பொது சுகாதாரத் துறை சார்பில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இதையும் படிங்க: முன்னாள் மத்திய அமைச்சருக்கு கரோனா!