ETV Bharat / state

ரூட் தல விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது - ரூட் தல விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது

சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் கட்டையால் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

"ரூட் தல விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது!
"ரூட் தல விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது!
author img

By

Published : Feb 1, 2023, 6:20 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஜனவரி 31) மாநில கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இணைந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களான சூர்யபிரகாஷ், நவீன் மற்றும் சூர்யா ஆகியோரை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது. இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து வீடியோவில் பதிவான நபர்களின் புகைப்படங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பொன்னேரி மற்றும் அம்பத்தூர் ரூட் முதலாம் மற்றும் மூன்றாமாண்டு மாநில கல்லூரி மாணவர்கள் மோதி கொண்டதும், ரூட் தல பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே கல்லூரியில் இரு தரப்பினரும் மோதி கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் தனுஷ் மற்றும் இரண்டாமாண்டு மாணவன் ரூபன் ஆகிய இரண்டு பேரை மெரினா போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் அன்பரசன் உள்ளிட்ட பல மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.