ETV Bharat / state

யானைக்கு ரேடியா காலர் பொறுத்த வரவழைக்கப்பட்ட கும்கிகள் - மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொறுத்துவதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டுள்ளன.

2-kumkis-arrived-mettupalayam-to-fix-radio-collar
யானைக்கு ரேடியா காலர் பொறுத்த வரவழைக்கப்பட்ட கும்கிகள்!
author img

By

Published : Jun 23, 2021, 7:10 PM IST

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று தனியே சுற்றி வருகிறது. எவ்வித தயக்குமும் இன்றி சாலையை கடப்பது, மனித நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருவது, வழியில் கிடைக்கும் வாழை போன்ற விவசாய பயிர்களை உண்பது, தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவது போன்றவை இந்த யானையின் தினசரி வாடிக்கையாகிவிட்டது.

வனத்துறையினர் இதனை காட்டை நோக்கி விரட்டினாலும் மீண்டும் மீண்டும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கே திரும்பி வந்தபடி உள்ளது. இதுவரை மனிதர்கள் யாரையும் இந்த யானை தாக்கியதில்லை என்றாலும் நீண்ட தந்தங்களுடன் குடிருப்பு வீடுகளின் வழியே கடந்து செல்வதும், சர்வ சாதாரணமாக சாலைகளில் சுற்றி திரிவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

பாகுபலி யானை

அதன் பெரிய உருவம் காரணமாக யானைக்கு பாகுபலி என்று அப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் இதனை அடர்ந்த காட்டினுள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தனியாக சுற்றித்திரியும் காட்டுயானை

யானைகளின் இயல்பான பழக்க வழக்கங்களை மீறி மாதக்கணக்கில் ஒரே இடத்தில் முகாமிட்டு மனிதர்கள் வாழும் பகுதியில் தனியே சுற்றித்திரியும் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் 14 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, நான்கு பிரிவாக பிரிந்து இரவு பகலாக பாகுபலியை கண்காணித்து வருகின்றனர்.

கும்கி யானைகள் வருகை

ரேடியோ காலர் பொருத்தும் பணிக்காக டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

யானைக்கு ரேடியா காலர் பொறுத்த வரவழைக்கப்பட்ட கும்கிகள்
கும்கி யானை

தொடர்ந்து பாகுபலியின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் வரும் சனிக்கிழமைக்குள் ரேடியோ காலர் பொருத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது, கும்கி யானைகள் நிறுத்தப்பட்டுள்ள மர சேமிப்பு கிடங்கு பகுதியில் மற்ற காட்டு யானைகள் உள்ளே புகுந்து விடாமல் இருக்க வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சரியான நேரம் அமைத்தவுடன் மருத்து குழுவினர் பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்துவார்கள் எனவும், அதன்பின்பு ரேடியோ காலர் பொருத்தும் பணி நடைபெறும் எனவும் மேட்டுப்பாளையம் வனச்சரகர் பழனி ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: திண்பண்டங்களைத் தேடி சமையலறையில் நுழைந்த காட்டு யானை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.