ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் மீது புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி -  முன்னாள் அமைச்சர் மீது புகார்
அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் மீது புகார்
author img

By

Published : May 12, 2022, 12:16 PM IST

சென்னை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் , அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன் என்பவர் தனக்கு நெருங்கிய நண்பர் எனவும், அவர் அமைச்சரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதனால் அரசு வேலை தேடி கொண்டிருந்த நபர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று அமைச்சரின் உதவியாளர் சுதாகரனிடம் தலைமை செயலகத்தில் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பல வருடங்களாகயும் குறிப்பிட்ட வேலை வழங்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து உதவியாளர் சுதாகரிடம் கேட்டபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டதாகவும் உடனடியாக வேலை கிடைத்துவிடும் எனதெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி பணத்தை திரும்ப கேட்க தலைமை செயலகம் சென்ற போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை கட்டாயமாக கிடைத்துவிடும் என சமரசம் செய்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீ யிடம் பணத்தை திரும்ப கேட்டப்போது, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும், அவரிடம் தான் பணம் இருப்பதாகவும், மேலும் இனி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன், என மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தன்னை மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உதவியாளர் சுதாகரன் உதவியாளரின் மனைவி தேவிஸ்ரீ ஆகியோரிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த சுதாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.