ETV Bharat / state

Tambaram: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 2 பேர் கைது - மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதித்த இளம்பெண்ணை கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 5:46 PM IST

செங்கல்பட்டு: தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணிடம் சென்ற மர்ம நபர்கள் அப்பெண்ணின் வாயை மூடி, அவரை அங்கிருந்து தூக்கிக்கொண்டு தாம்பரம் ரயில்வே நிலையம் அருகே உள்ள இருட்டான பகுதிக்குச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் இதைப் பார்த்ததும் கூச்சல் போட்டுள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி இந்த இரண்டு நபர்களையும் பிடித்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்: இதன் பிறகு, இதுகுறித்து தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (27), மணிகண்டன் (26) எனத் தெரியவந்தது. அத்தோடு, அவர்களிடம் இருந்து ஒரு பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறியில் ஈடுபடுவது, செயின் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு போன்ற 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும், இரவு நேரங்களில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கத்தியைக் காட்டி, செயின் பறிப்பு மற்றும் இரு சக்கர வாகனத் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் அதேபோல் இதற்காகப் பலமுறை சிறைக்குச் சென்று திரும்பியதும் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: அது மட்டுமின்றி சிறையில் இருந்து வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், மீண்டும் தாம்பரம் பகுதியில் கத்தி முனையில் செயின் பறிப்பு, இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிப்பது போன்றச் செயலில் ஈடுபடச் சென்றதும், அப்போது சாலையில் படுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபடக் கோரிக்கை: பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் இன்று (ஜூன் 28) தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரவு நேரங்களில் தாம்பரம் போலீசார் ரோந்துப் பணியில் இல்லாததால் செயின் பறிப்பு, கத்தியைக் காட்டி பணம் பறிப்பது, இவ்வாறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்வது போன்ற விபரீத சம்பவங்கள் தாம்பரம் பகுதியில் அடிக்கடி அரங்கேறிய வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே, போலீசார் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்புத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம் - 10 தீட்சிதர்கள் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.