சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி, நந்தனத்தில் தேவர் சிலைக்கு முக்கியத் தலைவர்கள் நேற்று (அக்.31) மரியாதை செலுத்தினர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் காவலர்களிடம் இரண்டு நபர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டும், கேலி செய்தவாறும் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் அந்த இரண்டு பேரையும் கைது செய்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், அவர்கள் சென்னை ரெட்டேரியைச் சேர்ந்த விஜயாபண்டி, தர்மேந்திரன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைதான விஜயபாண்டி மீது ஏற்கனவே, சோழவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ள நிலையில், கைதான இரண்டு நபர்கள் மீதும் ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்..
தொடர்ந்து, இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!