சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகில் திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் உரிமங்கள் இல்லாததால் அந்த நபர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை அண்ணா சதுக்கம் காவல் நிலையில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் 24 எனவும்; இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை எடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் எங்கிருந்து கஞ்சா கொண்டுவந்தார், எதற்காக கஞ்சா வைத்துள்ளார் எனப் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ரயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தல் - ரயில்வே போலீஸ் விசாரணை