ETV Bharat / state

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.. வெளியான அதிர்ச்சி தகவல்! - MBBS course in TN Govt Medical Colleges

MBBS course in TN Govt Medical Colleges: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 19 இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:48 PM IST

Updated : Oct 13, 2023, 6:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 37-ல் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான எம்பிபிஎஸ் இடங்கள் 16ம், பிடிஎஸ் இடங்கள் 24ம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 3 இடங்களும் காலியாக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைந்ததால், அரசு மருத்துவக்கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளது. கடந்தாண்டும் ( 2022-23 ) அகில இந்திய ஒதுக்கீட்டில் 6 இடங்கள் காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் காலியானதற்கு முக்கிய காரணமாக 3 சுற்று வரையில் மாணவர்கள் கல்லூரிகளை மாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதுதான் என மருத்துவக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கடந்தாண்டு வரையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் கல்லூரி மாற்றம் செய்ய 2 சுற்றுகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 3 சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ஒரு மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் இடத்தை மாறி மாறி தேர்வு செய்தனர்.

வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடத்தை தேர்வு செய்தப் பின்னர், 3 வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தால், அகில இந்திய ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகும். அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருந்ததால் கடந்தாண்டு 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு அட்டவணையும் நடப்பாண்டில் ஒன்றாகவே இருந்தது. கடந்த ஆண்டுகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்தப் பின்னர், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். அதேபோன்று ஒவ்வாெரு சுற்றுக் கலந்தாய்வும் நடைபெற்றது. 2023-24 ஆம் நடப்பு கல்வியாண்டில் 4 சுற்றுகளாக நடைபெற்ற கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நடைபெற்றன. பிடிஎஸ் படிப்பில் 4 வது சுற்றுக் கலந்தாய்வினை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு இன்னும் நடத்தாமல் உள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான காலக்கெடு முடிந்தப் பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 835 இடங்கள் அளிக்கப்பட்டன. அதில், 819 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 2 இடங்கள், கோயம்புத்தூர் இஎஸ்ஐசி, கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவள்ளுர், திருப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு இடங்கள் என 16 இடங்கள் காலியாக உள்ளன.

ஏழை மாணவர்களின் கனவு நனவாக வாய்ப்பு: தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு பல்மருத்துவக்கல்லூரியில் 37 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டது. அவற்றில் 13 இடங்களில் 3 சுற்றுக் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாநில காலியிடங்களுக்கான கலந்தாய்வினை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களில் 47 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களில் மாணவர்கள் படிப்பதற்கான கட்டணம் மிகவும் குறைவு என்பதால் ஏழை மாணவர்களின் கனவு நிறைவேற வாய்ப்புகள் உள்ளது.

மாநில அரசிற்கு அளிக்காததற்காக காரணம்: 2020-21ஆம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட இடங்களை நிரப்ப மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு இருகட்ட கலந்தாய்வுகளை மட்டுமே நடத்தும். அதில், நிரப்பப்பட்டாமல் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை தமிழக அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு நிரப்பிவிடும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக, 2021-22 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு திருப்பி அளிக்காமல், இரு சுற்றுக் கலந்தாய்வுகளுக்கு பதிலாக, 4 கட்ட கலந்தாய்வுகளை மத்திய அரசு நடத்துகிறது. நான்காவது கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும் அதில், மாணவர்களை சேர்க்க முடியாது. அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் காலியாகவே இருக்கும். இதுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு காரணம் ஆகும்.

இதையும் படிங்க: தமிழக அரசின் துணை இருந்தால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம்.. ஆசியர் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் நம்பிக்கை!

Last Updated : Oct 13, 2023, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.