சென்னை: தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் திமுக நிர்வாகியின் மகளுடன், 18 வயது சிறுவன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகியுள்ளார். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நண்பனைப் போல பழகிய சிறுவன், நாளடைவில் ஆபாசமான குறுஞ்செய்திகளையும் அனுப்பத் தொடங்கியுள்ளான். இது தொடர்பாக சிறுமி பலமுறை கண்டித்தும் தொடர்ந்து, சிறுவன் அதே போன்ற குறுஞ்செய்திகளையே அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தாயார், காவல் நிலையத்திற்கு சென்று சிறுவன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுவனை வைத்து பிக்பாக்கெட்: கையும் களவுமாகப் பிடித்த மக்கள்