தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஊதிய உயர்வு, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவர் பணியிடங்களை குறைக்கக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : பாசிக் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் !