சென்னை: தமிழ்நாட்டில் இன்று கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சில மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் அலுவலர்களிடம் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு வழக்கம்போல நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த காரணத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்களின் திடீர் கோளாறின்போது உடனே மாற்று ஏற்பாடு விரைந்து செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.