சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜீவிமோன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - ஹெலன் தம்பதியினர், ஜீவிமோன் கஞ்சா வியாபாரம் செய்வது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் ஜீவிமோன், ராமச்சந்திரன் - ஹெலன் தம்பதியரின் 17 வயது மகளை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
கடத்தப்பட்டு 55 நாட்களாகியும் சிறுமி மீட்கப்படாததால், ராமச்சந்திரன்- ஹெலன் தம்பதியினர் முதலமைச்சரை சந்தித்து புகார் கொடுப்பதற்காக இன்று(ஜன.5) சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். முதலமைச்சரை சந்திப்பதற்காக கண்ணீருடன் காத்திருந்த தம்பதியை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் இருவரும் தலைமைச் செயலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!