ETV Bharat / state

அசானி புயல் - இரண்டாவது நாளாக 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து - ஒடிசா

ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசானி புயல் காரணமாக, சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அசானி புயல் எதிரோலி இரண்டாவது நாளாக 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

author img

By

Published : May 11, 2022, 10:49 AM IST

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள அசானி புயல், ஆந்திரா ஒடிசா மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்திலும் பரவலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் லேசான மழை வரை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறைக்காற்றும் வீசி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சென்னையில் அசானி புயல் காரணமாக 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 8 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள், 9 விமானங்கள் சென்னைக்கு வந்து சேரும் விமானங்கள்.

விசாகப்பட்டினம் 6 விமானங்களும், விஜயவாடா 4 விமானங்களும், ஹைதராபாத் 2 விமானங்களும், ராஜமுந்திரி 2 விமானங்களும், பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா தலா ஒரு விமானங்கள் வீதம் மொத்தம் 17 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழை தாக்கத்தை பொறுத்து மேலும் சில விமானங்களும் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

மேலும் அசானி புயல் காரணமாக விமானங்கள் ரத்து,காலதாமதம் பற்றிய தகவல்கள் விமான பயணிகளுக்கு, அந்தந்த விமான நிறுவனங்கள் நேற்று இரவிலேயே அறிவித்து விட்டன.

இதையும் படிங்க: அசானி புயல்: திருவள்ளூரில் வெளுத்துக் கட்டிய மழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.