சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்.21) தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது.
மரபு முறைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றித் தொடங்கி வைத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், நேற்று (ஜூன்.22) நடைபெற்றது.
அண்மையில் மறைந்த முக்கிய நபர்களான நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா, டி.எம்.காளியண்ணன் உள்ளிட்ட 11 நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றும்(ஜூன்.23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடித்தபிறகு, வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றுவார்.
இதையும் படிங்க: யார் ஆட்சியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது: பேரவையில் காரசார விவாதம்!