மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகளை நேற்று (அக்டோபர் 16) தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கான அரசுப் பயிற்சி மையங்களில் படித்த ஆறாயிரத்து 692 மாணவர்களில் ஆயிரத்து 615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் முறையாக இந்த ஆண்டு தேர்வெழுதிய திருப்பூரைச் சேர்ந்த வாசுகி என்ற அரசு உதவிபெறும் பள்ளி மாணவி 580 மதிப்பெண்கள் பெற்று அரசு உதவிபெறும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
552 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் 2ஆம் இடம் பெற்றுள்ளார்.
522 மதிப்பெண்களுடன் அரசு உதவி பெறும் பள்ளியான காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் மாணவர் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 500-க்கு மேல் நான்கு மாணவர்களும், 400-500 மதிப்பெண்கள் 15 மாணவர்களும் 300-400 மதிப்பெண்கள் 70 மாணவர்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு: அரசு மையங்களில் படித்த 1,615 மாணவர்கள் தேர்ச்சி
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையங்களில் படித்த ஆறாயிரத்து 692 மாணவர்களில் ஆயிரத்து 615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.