சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம், தொழில் வரி, வாடகை தொகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை செளகார்பேட்டை பகுதியில் குடோன் தெரு மற்றும் கோயிந்தப்பன் தெருவில் தொழில்வரி செலுத்தாத கடைகள் மற்றும் தொழில் உரிமம் பெறாத 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட இந்த ஒரு பகுதியில் மட்டும் தொழில்வரி மற்றும் உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளால் கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் தொழில் வரி மற்றும் உரிமம் பெற்றதும் கடைகள் சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயம்