சென்னை: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கு முன் ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டம் போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி கட்டடங்கள் சூறையாடப்பட்டு, வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக, சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு மூலம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாட்ஸ் ஆப் குழுக்களை ஆரம்பித்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த துரைபாண்டி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ் ஆப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புற்று நோயால் உயிரிழந்த காதலி - துக்கம் தாங்காமல் காதலர் ரயிலில் விழுந்து தற்கொலை!