ETV Bharat / state

மானியம் இல்லாத சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் கவலை - gas price hike

சென்னை: மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 147 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

gas
gas
author img

By

Published : Feb 12, 2020, 5:26 PM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை நிர்ணயித்துவருகின்றன.

அதன்படி, சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 147 உயர்த்தப்பட்டு, ரூ.881க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 590 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத சிலிண்டர் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது 881 ரூபாயைத் தொட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் அதன் விலை 291 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுரைக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.