சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 5ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு சென்னையில் இருந்து தினசரி 2,255 பேருந்துகளுடன், 3,090 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து ஆறாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்தும் திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்தும் பெங்களூருவுக்கு மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்து: 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்