ETV Bharat / state

ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தல்: சென்னையில் ஒருவர் கைது - dubai flight

சென்னை: துபாய் நாட்டிற்கு வெளிநாட்டுப் பணக்கட்டுகளை உள்ளாடைக்குள் மறைத்துவைத்து கடத்த முயன்ற நபரை சென்னை விமான நிலை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

oney
oney
author img

By

Published : Oct 26, 2020, 7:33 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏா் இந்தியா விமானம் துபாய் புறப்படத் தயாரானது. அதில், பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சேர்ந்த சையத் அலி (26) என்பவா் தொழில் வேலையாக மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்திருந்தார். ஆனால், அவரின் செயல்பாட்டால் சந்தேகம் அடைந்த சுங்கத் துறையினர், உடைமைகளைச் சோதனை செய்தனர்.

அதில் எதுவும் கிடைக்காததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, உள்ளாடைக்குள் வெளிநாட்டுப் பணக்கட்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், சிகரெட் அட்டைகளிலும் வெளிநாட்டு கரன்சிகள் மறைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட சுமார் 13 லட்சத்து ஏழாயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.