ETV Bharat / state

12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு ஜூலை 24ம் தேதி வெளியீடு! - அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா

12 ம் வகுப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 24-ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

12 ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 24 ந் தேதி வெளியீடு

author img

By

Published : Jul 21, 2023, 6:54 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 2022-2023 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,03,385 மாணவ-மாணவிகள் எழுதினர்.

அவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று 94.03 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய 4,21,013 மாணவிகளில் 4,05,753 மாணவிகள் என 96.38 சதவீதம் பேரும், தேர்வு எழுதிய 3,82, 371 மாணவர்களில் 3,49,697 மாணவர்கள் என 91.45 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதி இருந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒரு மாணவரும் தேர்ச்சி அடைந்தார்.

மேலும், இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளே 4.93 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை மே மாதம் 8-ஆம் தேதி சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அப்போது, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தச் சேர்ந்த மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண்ணான 600-க்கு 600 மதிப்பெண்களை வாங்கி தமிழக அளவிலும், திண்டுக்கல் மாவட்ட அளவிலும் முதலிடமும் பெற்றிருந்தார்.

மேலும், தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் வருகைப் புரியாத மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு துணைத்தேர்வு ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதன் அடிப்படையில், 12-ஆம் வகுப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூன் 19 ந் தேதி முதல் 26 ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன் முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 24 ந் தேதி மதியம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எண் மற்றும் பிறந்தத் தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம்: 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 27 மற்றும் 28 ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.

தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு என புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்துக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெலிகிராம் மூலம் அதிகரிக்கும் மோசடி.. சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.