ETV Bharat / state

12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், துணைத் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

exam
துணைத்தேர்வு
author img

By

Published : May 10, 2023, 3:17 PM IST

சென்னை: அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஜூன் மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வினை எழுதுவதற்கு 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த அல்லது தேர்விற்கு வராத மாணவர்கள், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

11ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறாத, 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறாத பாடங்களுக்கு அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மே 11ம் தேதி முதல் 17ம் தேதி வரையில் (14ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையைத் தவிர) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் விவரங்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வுக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தைப் பணமாக செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாத தேர்வர்கள் மே 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்கள் வேலை நேரம் மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.