சென்னை: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில மொழிதாள் தேர்விற்கு பதிவு செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களில் சுமார் 49,500 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாள் 13 மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8 லட்சத்து ஆயிரத்து 744 பேர் மட்டுமே தேர்வினை எழுதியுள்ளனர். மீதமுள்ள 49.599 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களாக 8 ஆயிரத்து 901 பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 7 ஆயிரத்து 786 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். மீதமுள்ள 1,115 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. தேர்விற்கு விண்ணப்பித்திருந்தும் தேர்வு எழுதவில்லை என்பதால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வினை எழுதவும் சுமார் 49, 500 பேர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆங்கில தேர்வினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து எழுதிய ஒரு மாணவர் மட்டும் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு துவங்குவதற்கு முன்னர் மாணவர்களின் பெயர்களை நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும்.
ஆனால், நடப்பாண்டில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் வசதிகள் கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்