சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாதம் பேறுகால விடுப்பு வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தனிப்பிரிவில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவு பதிலளித்துள்ளது. அதில், தற்காலிக விரிவுரையாளர்கள் 11 மாதம் மட்டுமே ஊதியம் பெறுவதால், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 12 மாதம் பேறுகால விடுப்பு வழங்க முடியாது என விளக்கம் கொடுத்துள்ளது.
அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு 9 மாத கால பேறுகால விடுப்பை 12 மாதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்