ETV Bharat / state

11ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு! - கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

சென்னை: நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

release
release
author img

By

Published : Jan 27, 2021, 2:13 PM IST

கரோனா பொது முடக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிற வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்தொலைக் காட்சியில் நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையிலும், வல்லுநர் குழுவின் ஆலோசனையின் படி பாடத் திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் ஒவ்வொருப் பிரிவிலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து தற்பொழுது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 40 பாடங்களிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைக்கப்பட்ட பாடப்பொருள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.