ETV Bharat / state

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள்; சென்னை விமான நிலையம் வருகை - வெளியுறவுத்துறை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

11 fishermen from Tamil Nadu who were released from Sri Lankan jail arrived at Chennai airport
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்
author img

By

Published : Apr 17, 2023, 3:30 PM IST

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள்; சென்னை விமான நிலையம் வருகை

சென்னை: நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேர், கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் வந்து சுற்றி வளைத்து தமிழக மீனவர்களை தாக்கியதோடு, அவர்கள் 11 பேரையும் கைது செய்து அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து மீன்கள், வலைகளையும் கைப்பற்றி, இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசரமாக கடிதங்கள் எழுதினார்.

இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பது பற்றி பேசினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினர். அதோடு 11 தமிழ்நாடு மீனவர்களுக்கும், பாஸ்போர்ட், விசா போன்றவைகள் இல்லாததால் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். மேலும் மீனவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு விமான டிக்கெட் ஏற்பாடுகளும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டன.

இதை அடுத்து இன்று இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 11 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் சொந்த ஊர்களான நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: துபாய் தீ விபத்தில் 2 தமிழர்கள் மரணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.