சென்னை திருமங்கலம் நேரு நகரைச் சேர்ந்தவர் நேரு (19). இவர் சென்னை மாநில கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஏ படித்துவருகிறார். இன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் நெல்சன் மாணிக்கம் பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லும்போது பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திக் (20), அவருடன் வந்த 10 மாணவர்கள் நேருவின் பைக்கை வழி மறித்தனர்.
பின்னர் நேருவிடம் மாநில கல்லூரிதானே படிக்கின்றாய் என மிரட்டி அவரது ஐடி கார்டை பிடுங்கி கொண்டனர். பின் பேசிக்கொண்டிருக்கும்போதே கார்த்திக் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நேருவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். நேரு ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அருகிலிருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்தனர். தகவலின் அடிப்படையில் சூளைமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரான அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) உள்ளிட்ட 11 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுபானக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது!