ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 11 மணி நேரம் விசாரணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம், 11 மணி நேர தீவிர விசாரணையில் லஞ்சஒழிப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலிருந்து வெளிவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 27, 2021, 9:37 AM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 25.56 லட்சம், காப்பீட்டு நிறுவன முதலீடு உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனையின் அடிப்படையில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலிருந்து வெளிவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான காணொலி

11 மணி நேர விசாரணை

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று ஏற்கனவே ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகினார்.

அவரிடத்தில் மொத்தமாக 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு வினாக்கள் விஜயபாஸ்கரிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணை முடிந்து காரில் புறப்படும் போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தேன். மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன்.

தீபாவளிக்கு பிறகு மீண்டும் ஆஜர்

வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளேன். வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். அனைத்து சொத்திற்கும் முறையான கணக்கு இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தலின் போது என் மீது போடப்பட்ட வழக்கு இன்று(அக்.27) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதற்காக ஆலோசனை பெறவும், தீபாவளி பண்டிகைக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாகவும் கேட்கப்பட்ட அனுமதிக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் சிவசங்கர் பாபா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.