ETV Bharat / state

பிளஸ்-1 சிறப்பு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - supplementary exam

சென்னை: "பிளஸ்-1 வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் சிறப்புத் துணைத் தேர்வு எழுத மே.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்" என்று, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்துரா தேவி தெரிவித்துள்ளார்.

11-ம் வகுப்பு தேர்வு
author img

By

Published : May 15, 2019, 6:26 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ்-1வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வினை எழுதுவதற்கு மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்), அந்தெந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே.16 மற்றும் 17 ஆகிய நாட்களில் விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தோடு மதிப்பெண் பட்டியல் நகல், பொதுத் தேர்வின் போது வருகை தராதவர்களாக இருந்தால் நுழைவுச் சீட்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை பணமாகதான் செலுத்த வேண்டும். இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அறிவுரையின் படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளும் நாள் பின்னர் அறிவிக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

11 ம் வகுப்பு சிறப்புத்துணைத் தேர்வு எழுத
இறுதியாக 16,17 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் 

 சென்னை, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  
 11 ம் வகுப்பு சிறப்பத் துணைத் தேர்வினை எழுதுவதற்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்  கீழ் (தட்கல்)  
 தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில்  
தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும். 
 
11 ம் வகுப்பு மார்ச் பொதுத் தேர்வினை எழுதியவர்கள்  அவரின்  மதிப்பெண் பட்டியலின்
நகலினையும், தேர்விற்கு வருகை புரியாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினையும்,
விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். 
 தேர்வுக்கட்டணத்தை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
பணமாகச் செலுத்த வேண்டும்.
 
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம்
தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி
விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும்
தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து
ஆய்வு  செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.