ETV Bharat / state

2 சிறுமிகள் உள்பட மூன்று பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு - 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் கைது! - போக்சோ

ஒரு இளம்பெண் மற்றும் 2 சிறுமிகளை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள் உள்பட 11 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

Chennai police arrested eleven people
Chennai police arrested eleven people
author img

By

Published : Jul 2, 2023, 8:01 AM IST

சென்னை: ஒரு இளம்பெண் மற்றும் 17 வயது சிறுமிகள் சென்னையில் உள்ள அவர்களது சித்தி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி 17 வயது சிறுமி மட்டும் இரவு 2 மணிக்கு வீடு திரும்பியதால் அவரது சித்தப்பா அவரிடம் விசாரித்து கண்டித்தபோது, அருகிலிருந்த வீட்டார் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, இரண்டு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது, அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி மீது எந்த ஒரு காயங்களும் ஏற்படவில்லை எனவும், பாலியல் வன்புணர்வு செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை எனவும், அவரது ஒத்துழைப்பின் பேரிலே பல முறை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவினரான 2 பெண்களும் இணைந்து இரவு நேரங்களில் பல இடங்களில் சுற்றியபோது, 15க்கும் மேற்பட்டோர் அழைத்துச் சென்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்துள்ளது.

அதே போல கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு இரண்டு பெண்களும் வீட்டிற்கு சென்ற நிலையில், 17 வயது சிறுமி மட்டும் நள்ளிரவு 2 மணிக்கு சென்றதால், அவரை அவரது சித்தப்பா கண்டித்ததால் சிறுமி பொய் கூறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி உள்பட 3 பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த அதே பகுதியைச் சேர்ந்த 18 - 22 வயதுடைய 8 இளைஞர்களையும், 15, 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்களையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 19 வயதுடைய கல்லூரி மாணவரும் அடங்குவார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை மட்டும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய தடை... இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.