ETV Bharat / state

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணக்குத்தேர்வு - மாணவர்கள் வருத்தம் - கணக்குத்தேர்வு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்குப் பாடத்துக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
author img

By

Published : Mar 25, 2019, 11:43 PM IST

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கியது. தமிழ்,ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முக்கியப் பாடமான கணக்குத் தேர்வு இன்று நடைபெற்றது.

கணிதம் தேர்வு முடிவடைந்த நிலையில் வினாத்தாள் குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது,

கணக்கு வினாத்தாளை பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. 2 மதிப்பெண், 5 மதிப்பெண், 10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் முற்றிலும் புதிதாக இருந்ததது என மன வருத்தத்துடன் தெரிவித்தனர். கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை விட கணக்கில்தான் 100 க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும். ஆனால் இந்த வினாத்தாளில் 75 க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என்றனர்.

மேலும், இதுகுறித்து அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது;

பொதுவாக 50 சதவீதம் எளிமையாகவும், 30 சதவீதம் சராசரியாகவும், 20 சதவீதம் கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர்கள் தங்களது திறமையை மாணவர்களிடம் காட்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனால், கணக்கு பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணக்குத்தேர்வு
தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு

சென்னை,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்குப் பாடத்துக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 
இதன் காரணமாக கணக்கு பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது.  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முக்கியப் பாடமான கணக்கு த்தேர்வு இன்று நடைபெற்றது. 
கணக்கு  வினாத்தாள் குறித்து மாணவர்கள்  கூறும்போது,கணக்கு வினாத்தாளை பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது.  காலாண்டு,  அரையாண்டுத் தேர்வுகள் மட்டுமல்ல கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் இந்தத் தேர்வில் இடம்பெற்றிருந்தன.  ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வினாக்கள் மிகவும் கடினம். ஏனைய வினாக்கள் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. 2 மதிப்பெண், 5 மதிப்பெண்,  10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் முற்றிலும் புதிதாக இருந்தன.  கணக்கு,  அறிவியல்,  சமூக அறிவியல் ஆகிய முக்கியப் பாடங்களில் கணக்கில்தான் 100 க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும்.  ஆனால் இந்த வினாத்தாளில் 75 க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என்றனர்.

 இது குறித்து அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறியது:  பொதுவாக 50 சதவீதம் எளிமையாகவும், 30 சதவீதம் சராசரியாகவும், 20 சதவீதம் கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர். 

மாணவர்கள் தேர்ச்சி பெற 5 மதிப்பெண் பகுதியில் உள்ள கேள்விகள் பெரிதும் உதவும். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள 9 வினாக்களில் ஒரே ஒரு வினாவுக்கு மட்டுமே சராசரி மாணவர்களால் பதிலளிக்க முடியும்.  மற்ற வினாக்களை கடினம்,  மிகக் கடினம் என வகைப்படுத்தலாம்.  மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். இதன் மூலம் கணக்குத்தேர்வில் 100 சதவீதம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவதோடு,  அந்தப் பாடத்தின் தேர்ச்சி சதவீதமும் பாதிக்கும்.
 என்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.