ETV Bharat / state

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

author img

By

Published : Sep 3, 2019, 6:58 PM IST

சென்னை: ஊதிய உயர்வை வழங்கk கோரி தேனாம்பேட்டை, மக்கள் நல்வாழ்வு துறை அலுவலகம் முன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில்; "108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 4500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு, சம்பளத்தில் 20 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தும் தனியார் நிறுவனமான ஜி.வி.கே. எம்.ஆர்.ஐ நிறுவனத்திடம் மனு அளித்தோம்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆனால் நிர்வாகம் தன்னிச்சையாக 15 விழுக்காடு ஊதிய உயர்வை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் பிரச்னையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ சேவைகள், மாநில திட்ட இயக்குனர் தீர்க்க வேண்டும். எனவே எங்கள் கோரிக்கையை மாநில திட்ட இயக்குனரிடம் தெரிவிக்கவந்துள்ளோம். ஒருவேளை, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றார்.

Intro:108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி காத்திருப்பு போராட்டம்

Body:ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை,
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு ஆண்டுதோறும் உயர்த்தி வழங்கவேண்டிய ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கூறும்போது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை பணி மூப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 4500 க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்சில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறோம்.
108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தும் தனியார் நிறுவனமான ஜிவிகே எம்ஆர்ஐ நிறுவனத்திற்கு சம்பளத்தில் 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளோம்.
ஆனால் நிர்வாகம் தன்னிச்சையாக 15 சதவீதம் ஊதிய உயர்வை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

1947 ஆம் ஆண்டு தொழில் தகராறு சட்டத்தின்படி தொழிற்சங்கத்தினருடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தவிர்ப்பது குற்றமாகும். ஏற்கனவே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி தொழிலாளர்கள் பிரச்சனையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ சேவைகள் மாநில திட்ட இயக்குனர் தீர்க்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
எனவே எங்கள் கோரிக்கையை மாநில திட்ட இயக்குனர் இடம் தெரிவிக்க வந்துள்ளோம்.
எங்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை என்றால் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.