ETV Bharat / state

பள்ளிகள் திறந்து 10 நாள்களுக்குப் பிறகே 10, 12ஆம் தேர்வு நடத்த வேண்டும் - பொதுப்பள்ளிகான மாநில மேடை ஆலோசனை - 10 12 பொதுத் தேர்வு

சென்னை : ஊரடங்குக்குப் பிறகு பள்ளிகள் திறந்து 10 -15 நாள்களுக்குப் பிறகே 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஆலோசனை வழங்கியுள்ளது.

Breaking News
author img

By

Published : May 1, 2020, 9:22 AM IST

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தற்போது ஏற்பட்டுள்ள சுகாதாரப் பேரிடர் நாம் எதிர் பார்க்காத ஒன்று. ஊரடங்கிற்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யூகித்துப் பார்க்க இயலாத சூழலில் மக்கள் வாழ்கின்றனர்.

இத்தகையச் சூழலில், பத்தாம் வகுப்பு, விடுபட்ட பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகியவற்றின் தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு எப்போது, எவ்வாறு நடக்கும் என்ற பதட்டத்தில் பெற்றோரும் மாணவர்களும் இருக்கின்றனர்.

சிபிஎஸ்இ வாரியம் பள்ளி திறந்து 10 நாள்கள் வகுப்பு நடந்த பின்னரே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் என்று திட்டவட்டமாகத் தனது சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அரசாங்களுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை :

1.பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்பிற்கு மாற்றாக இணையதள வகுப்பு நடத்தப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. அது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

2.இணையதள வழியில் வகுப்பு நடத்தப்படுவதைப் பாடத்திட்ட வேலை நாளாக, நேரமாக அங்கீகரிக்க இயலாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

3.தமிழ் நாட்டில் உள்ள மத்தியப் பாடத்திட்ட (CBSE / ICSE) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்தத் தமிழ் நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

4.அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்திப் பெற்றோரை இணையதள வகுப்பிற்கானக் கருவிகளைப் பெற்றுத் தர வற்புறுத்தக் கூடாது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்று அரசு நிலை எடுத்தால் அதற்கு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுகிறோம்:

1.தேர்வு நடந்தால் ஐந்து பாடங்கட்கும் தேர்வு நடத்த வேண்டும்.

2.ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படுகிறதோ, அவ்வாறு விலக்கிக் கொள்ளப்பட்டுப் பள்ளிகள் திறக்கப்படும் போது, குறைந்தது 15 வேலை நாள்கள் வகுப்பு நடந்த பின்பே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும்.

3.பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் பள்ளி திறந்த பின் குறைந்தது பத்து நாள்களுக்குப் பிறகு தேர்வு நடத்த வேண்டும்.

4.பதினொன்றாம் வகுப்பிற்கானப் பொதுத் தேர்வில் இறுதியாக நடக்க இருந்த ஒரு தேர்வு மட்டும் நடக்கவில்லை. அத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து பன்னிரண்டாம் வகுப்பில் அமரச் செய்யலாம்.

5.குறிப்பிட்ட தேர்விற்கான செய்முறைத் தேர்வுகள் உள்ளிட்ட வகுப்பு நடைமுறைகள் முடிந்து மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்ட பிறகே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வகுப்பறைப் பங்கேற்பு, பருவ, மாதிரி தேர்வு முடிவுகளின் சராசரி மதிப்பெண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அக்குறிப்பிட்ட பாடத்திற்கானத் தேர்ச்சியைத் தீர்மானிக்கலாம்.

6.மாணவர் நலன் கருதி‌ காலம் தாழ்த்தாமல் தேர்வு நடைமுறை குறித்த தனது முடிவினை உடனடியாக அறிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிகள் : தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து 1,258 பேர் பூரண குணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.