ETV Bharat / state

சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!

சென்னையில் நிர்பயா நிதித் திட்டத்தின்கீழ் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகள், புதிதாக 156 பேருந்து நிழற்குடைகள் அமைப்பது உள்ளிட்ட 101 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று (மே30) நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 101 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

author img

By

Published : May 30, 2022, 8:00 PM IST

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று(மே30) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த மாதம் சென்னையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கூடிய பிறகு, மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று(மே30) நடைபெற்றது. மாமன்றத்தில் கேள்வி நேரம், நேரம் இல்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுக்கு உட்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

இறுதியாக 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியில் இன்று(மே30) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கிய சில:

  • மாம்பழம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராயநகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் ஆகாய நடைபாதை திட்டத்திற்கு கால நீட்டிப்பு தொடர்பான தீர்மானம்
  • சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு துறை நிதிகளின் மூலமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் தீர்மானம்.
  • சென்னையில் ஸ்பா மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் வழங்கும் விதிகளை மாநகராட்சி முனிசிபல் சட்ட அட்டவணையில் சேர்க்கும் தீர்மானம்
  • தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி சொத்து வரி பொது சீராய்வை நடைமுறைப்படுத்தும் தீர்மானம்.
  • நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பொது இடங்களில் பெண்களுக்கு நடமாடும் கழிவறை
  • சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கும் அனுமதி தொடர்பான தீர்மானம்
  • சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 779 பேருந்து நிழற்குடைகளை மேம்படுத்தவும், 156 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் தீர்மானம்.
  • இந்த ஆண்டு பருவ மழையை முன்னிட்டு மழை நீர் வடிகாலினை தூர்வாரும் சிறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்.
  • நிர்பயா நிதியின் கீழ் சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் என்பன உள்ளிட்ட 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சியில் பட்ஜெட்டை முன்னிட்டு நடந்த விவாதங்கள்... ஒரு பார்வை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.