சென்னை நகரில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கரோனா தொற்று பரவலை தடுக்க சென்னையில் மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவ துறை,காவல் துறை என அனைவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குறிப்பாக கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர், மாநகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் சென்று கரோனா பாதித்தவரை அழைத்து வருவது, ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை என பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தீயணைப்பு துறையினர், ரயில்வே காவலர்கள், ஊர்க்காவல் படை என அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் மட்டும் சுமார் 101 காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று(மே 12) சென்னை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதே போல் தி.நகரில் துணை ஆணையராக இருந்து வரும் காவலருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்து வரும் ஐ.பி.எஸ் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெனீஸிலிருந்து படப்பிடிப்பை மாற்ற விரும்பாத டாம் குரூஸ்