ETV Bharat / state

சித்தா,யுனானி,ஆயுஷ் மருத்துவப்படிப்புகளில் 1000 இடங்கள் காலி - வருகிறது மீண்டும் கலந்தாய்வு - Councelling for Siddha

மாணவர்கள் மத்தியில் ஆயுஷ் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு குறையும் ஆர்வம் காரணமாக, முதல் சுற்று கலந்தாய்வின் நிறைவில் ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் சேர்க்கையின்றி காலியாக நீடிக்கின்றன.

ஆயுஷ் பாரம்பரிய படிப்பில் குறையும் ஆர்வத்தால் ஆயிரத்துக்கும் மேலான சீட்டுகள் காலி

author img

By

Published : Jan 27, 2023, 10:29 PM IST

சென்னை: இளங்கலை மருத்துவப்படிப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இந்திய மருதத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புகளில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர்கின்றனர்.

மேலும், 2022-23-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2022 அக்டோபர் மாதம் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 280 இடங்களும், 26 சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் 1660 இடங்களும் என 1940 இடங்கள் இருந்தன. அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு 2573 மாணவர்கள் தகுதிபெற்றனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவப்படிப்பில் இளங்கலை படிப்புகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 57-ம், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி இடங்கள் 416 என்று 473 இடங்களும், இதேபோன்று 7.5 விழுக்காடு அரசு மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் அரசு கல்லூரிகளில் 61 இடங்களும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 429 என 490 இடங்களும் காலியாக உள்ளன. நடப்பாண்டில் ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.

மேலும், நடப்பாண்டில் அரசு மற்றும் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் 1171, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 521, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என 1940 இடங்கள் உள்ளன. தற்பொழுது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 521 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும், இந்தப் படிப்புகளை தேர்வு செய்த பல மாணவர்கள், அதன் பிறகு, பல் மருத்துவம் உள்ளிட்டப் பிற படிப்புகளுக்குச் சென்றுள்ளனர். பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கு கால அவகாசம் இருக்கிறது. எனவே, விருப்பமான மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:2023 மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.